அஜிடேட்! வாழ்த்திக் கொண்டாடுகின்றது பேராசிரியர் ஷைலஜா பைக்கிற்கு மெக் ஆர்தர் விருதின் வழங்கப்படல் மூலம் அவரது பணிக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம்

“மனிதருள் விளங்கும் அசமத்துவம் மற்றும் மனிதம் மறுக்கப்படலை ஆராய்வதன் மூலம் ஒட்டுமொத்த மனிதம் மற்றும் ஒட்டுமொத்த விடுதலை பற்றி சிந்திப்பதற்கான புது வழிகளை கண்டெடுக்கலாம்”

இந்தக் கலகக்காரக் கருத்து வரலாற்றுவியலாளர் ஷைலஜா பைக்கினுடையது. தலித் பெண்களின் வாழ்வின் மூலம், நவீன இந்தியாவில் பால்நிலை, சாதி மற்றும் பாலியல்பு பற்றி அவர் செய்துள்ள திடமான, ஆக்கபூர்வமான மற்றும் கூர்மையான ஆய்வின் மூலம், விளிம்புநிலையிலிரிருந்து ஆதிக்கம் மற்றும் போராட்ட வரலாறுகளை நாம் ஆராயும் மற்றும் எழுதும் முறைமைகளில் பெரும் மாற்றம் கொண்டுவந்துள்ளார். கவிஞர் ஜெரிகோ பிரவுன், திரைப்பட இயக்குனர் ஸ்டெர்லின் ஹார்யோ, சட்டவியலாளர் மற்றும் அரசக் கோட்பாடுகள் ஆய்வாளர் டொரொதி ரோபர்ட்ஸ், மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான செயல்பாட்டாளர் ஆலிஸ் வோங்க் ஆகியோர் அடங்கிய 21 முக்கிய ஆளுமைகளுடன் பேராசிரியர் ஷைலஜா பைக்கிற்கும் மெக் ஆர்தர் விருது வழங்கப்பட்டதை அஜிடேட் கொண்டாடுகிறது. ‘மேதைகள் விருது’ எனவும் அறியப்படும் மெக் ஆர்தர் விருது, தமது துறையில் பெரும் சாதனை படைத்து, மேலும் அறிய பணி செய்யக்கூடிய நபர்களுக்கு வழங்கப்படும், எவ்வித நியமனங்களும் அற்ற 800,000 டொலர் மதிப்புடைய விருதாகும். 

சர்வதேச அளவில், உயர் கல்வி கட்டமைப்புகளின் வரலாற்றில், ஆதிக்கம் செலுத்தும் அறிவுருவாக்கக் நிறுவனத்துள் ஷைலஜா பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இனப்படுகொலையும் யுத்தங்களும் நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில், பைக்கின் பணி போராட்டத்தின் மூலம் அறிவுருவாக்கத்தின் சாதகத்தன்மைகளை மெலும் கற்பனை செய்து, விரிவாக்கி, ஆழமாக்கத் தூண்டுகிறது. இதன்மூலமே போராட்டங்கள் உருவான களங்களின் உள்ளேயும் வெளியேவும், கட்டமைப்புரீதியாக நசுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட அனைத்தையும் நாம் ஆக்கபூர்வமாக மீட்டெடுத்து செழிக்கவைக்க முடியும். ஒட்டுமொத்த மனிதம் மற்றும் ஒட்டுமொத்த விடுதலைக்கான தேடலில் பேராசிரியர் பைக்கின் தைரியமான பணியிலிருந்து மேலும் கற்று, அது நம்முன் நிறுத்தும் அரசியல்சார் மற்றும் அறிவுருவாக்கம்சார் சவால்களை எமதாக்கிக்கொண்டு ஊக்கம் பெற ஆவலாக உள்ளோம்.

TRANSLATION: ENGLISH